சாலையோரம் வசிக்கும் 200 பேருக்கு தினமும் உணவுப் பொட்டலங்கள் வழங்கி உதவும் மக்கள் நீதி மய்யம் இளைஞர்கள்

மக்கள் நீதி மய்யம் இளைஞர்கள்

சென்னையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணியினர் உணவு பொட்டலங்கள் வழங்கி உதவி செய்துவருகின்றனர்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10-ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக, பலரும் தங்களது வாழ்வாதரங்களை இழந்துள்ளனர். குறிப்பாக சாலையோரம் வசிக்கும் மக்கள் அன்றாட உணவுக்கே தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  இந்தநிலையில், பல்லாவரம் மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் நண்பர்கள் இணைந்து சாலையோர மக்களுக்கு உணவு அளித்துவருகின்றனர். இதுகுறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் இயக்கத்தின் பல்லாவரம் இளைஞர் அணியைச் சேர்ந்த கண்ணன், ‘ஊரடங்கு தொடங்கிய மே 10-ம் தேதியிலிருந்து தினமும் குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு உணவு வழங்கிவருகிறோம். புலிக்கொரடு என்ற சிறிய கிராமத்தில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  மக்கள் நீதி மய்ய இளைஞர்கள்


  அவர், உணவு கேட்டிருந்தனர். அவர்களுக்கு 50 உணவு பொட்டலங்கள் வழங்கிவருகிறோம். காவல்துறைக்கு தன்னிச்சையாக வந்து உதவுபவர்களுக்கு 30 உணவு பொட்டலங்கள் வரை வழங்கிவருகிறோம். தாம்பரத்தில் சாலையோரம் வசிக்கும் மக்கள், பயன்படுத்தும் டேங்கில் மாநகராட்சியிலிருந்து தண்ணீர் ஊற்றுவதில்லை என்று அந்த மக்கள் புகார் தெரிவித்தனர்.

  மக்கள் நீதி மய்ய இளைஞர்கள்


  அதனைத் தொடர்ந்து, டேங்கை சுத்தம் செய்து தண்ணீரை நிரப்பினோம். ஒரு நாளைக்கு சுமார் 200 உணவு பொட்டலங்களை வர வழங்கிவருகிறோம்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: