Home /News /tamil-nadu /

கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு - ஊடகங்களுக்கும் நீதிபதிகள் அறிவுரை

கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு - ஊடகங்களுக்கும் நீதிபதிகள் அறிவுரை

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

காந்தியைக் கொன்றவர் நாதுராம் கோட்சே. அவர் ஒரு இந்து என்று கமல் பேசவில்லை. மாறாக, உள்நோக்கத்துடன், காந்தியைக் கொன்றவர் ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியுள்ளார்.

  • News18
  • Last Updated :
முன்ஜாமின் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைகிளை  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அரவக்குறிச்சி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே, இந்து தீவிரவாதம் குறித்து பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசிய வீடியோ ஆதாரம் நீதிபதிகளிடம் காட்டப்பட்டது.

கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன், ‘நான் ஏன் காந்தியை கொலை செய்தேன் என்ற கோட்சேவின் புத்தகத்தின் அடிப்படையிலேயே கமல்ஹாசன் பேசினார். கோட்சேவைப் பற்றி மட்டுமே நான் பேசினேன். இந்துக்களைப் பற்றி பேசவில்லை. கமல் பேசிய கருத்து, அவரது பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாகப் பகிரப்படுகிறது. வழக்குப் பதிவும் உரிய ஆவணங்களுடன் இல்லை’ என்று வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கருத்து தொடர்பான வழக்கில் கமலின் பதில் திருப்தி அளிக்கவில்லையென்றால், அவர் கைது செய்யப்படலாம். கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்குப் பதிவு செய்துள்ளோம். காந்தியைக் கொன்றவர் நாதுராம் கோட்சே. அவர் ஒரு இந்து என்று கமல் பேசவில்லை. மாறாக, உள்நோக்கத்துடன், காந்தியைக் கொன்றவர் ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியுள்ளார். கமலுக்கு உரிய தண்டனை வழங்கவில்லையென்றால், அவரது கட்சித் தொண்டர்களும் அதேபோல பேசுவார்கள்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ‘கோட்சைவுக்கு இந்து என்பதைத் தவிர வேறு அடையாளம் எதுவும் இல்லையா? தேர்தல் ஆணையத்துக்கு செல்ல வேண்டிய வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருகின்றன. கமல் பேசிய விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் விவாதங்களையும், கருத்துகளையும் பதிவிட வேண்டாம்’ என்று அறிவுரை கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see:

Published by:Karthick S
First published:

Tags: Kamal hassan

அடுத்த செய்தி