• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மநீம முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன் திமுகவில் இணைகிறார்.. காத்திருக்கும் முக்கிய பதவி

மநீம முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன் திமுகவில் இணைகிறார்.. காத்திருக்கும் முக்கிய பதவி

மகேந்திரன்

மகேந்திரன்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது.

  • Share this:
    மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத்தலைவராக இருந்த மகேந்திரன் நாளை திமுகவில் இணைவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்தது முதல் அவருடன் நெருக்கமாக இருந்தவர் மகேந்திரன். கட்சியில் முக்கிய பொறுப்புகளை பார்த்து வந்த மகேந்திரனுக்கு கமல்ஹாசன் துணைத்தலைவர் பதவியை வழங்கினார்.

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் தனது சொந்த ஊரான கோவையில் மகேந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவையின் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார்.

    Also read :  சி.வி.சண்முகம் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. இந்தியா முழுவதும் 300-க்கு மேல சீட் வாங்கியிருக்கோம் - ராகவன் பதிலடி

    சிங்கநல்லூர் தொகுதியில் மகேந்திரன் தோல்வியடைந்தாலும் 3-ம் இடம்பிடித்தார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது. இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.

    மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மகேந்திரனும் அறிவித்தார். மேலும் கட்சி மீதும் கமல்ஹாசனம் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் அவரை துரோகி என விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமானது.

    Also Read : அ.தி.மு.க தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க கூட்டணிதான் காரணம் - சி.வி.சண்முகம் நிர்வாகிகளிடம் குமுறல்

    இந்நிலையில் மகேந்திரன் உள்ளிட்ட 75 பேர் முதற்கட்டமாக நாளை மாலை திமுகவில் இணைய உள்ளனர். திமுகவும் கொங்கு மண்டலத்தில் தங்களது பலத்தை அதிகரிக்க மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்வை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மகேந்திரனை கோவை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: