முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டார்ச்லைட் சின்னத்தைக் கைப்பற்ற மக்கள் நீதி மய்யம் தீவிரம்

டார்ச்லைட் சின்னத்தைக் கைப்பற்ற மக்கள் நீதி மய்யம் தீவிரம்

கமல்ஹாசன்.

கமல்ஹாசன்.

டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மக்கள் நீதி மய்யம் கட்சி முறையிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொதுச் சின்னத்தை சமீபத்தில் ஒதுக்கியது. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது . தமிழகத்தைப் பொறுத்தவரை எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.

காலதாமதமாக விண்ணப்பித்ததால் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் டார்ச்லைட் சின்னத்தை வழங்கியது போல், தமிழகத்திலும் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் சார்பில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.

Also read: ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு ஒப்படைக்காதது அதிர்ச்சியளிக்கிறது’- டிடிவி தினகரன்

இது தொடர்பாக மக்கள் நீதிமய்யம் வழக்கறிஞர்கள் ஸ்ரீதர், சந்தோஷ்பாபு ஆகியோர் நேரில் சென்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். கடந்தமுறை தேர்தலில் மக்கள் நீதிமய்யம் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டதால், அதனடிப்படையில் மீண்டும் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கவில்லை என்றால், டெல்லி உயர்நீதிமன்றத்தை மக்கள் நீதிமய்யம் நாட வாய்ப்புள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Makkal Needhi Maiam