பணத்தை மறந்து.. டார்ச் லைட்டுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்

பணத்தை மறந்து.. டார்ச் லைட்டுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்

மநீம வேட்பாளர் பத்மப்ரியா

அவரது உதவியாளர் பணத்தை கொண்டு வந்து கொடுத்த பின்னர் மனு தா்க்கல் செய்தார்.

 • Share this:
  மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா மநீம சின்னம் டார்ச் லைட்டுடன் வேட்பு மனு தாக்கல் செய்த வந்தார். அப்போது, வேட்புமனு கட்டணத்திற்கான பணத்தை மறந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  ஏப்ரல் 6 ம் தேதி  தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

  இந்நிலையில்,  இன்று மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மநீம கட்சி  சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மாநிலச் செயலாளரும் அக்கட்சி  மதுரவாயல் தொகுதி வேட்பாளர்  பத்மபிரியா தனது ஆதரவாளர்களுடன் கட்சி சின்னமான டார்ச்  லைட்டை கையுடன் எடுத்து வந்தார்.  மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில்  தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

  Must Read : ரேஸ் கோர்ஸில் வாக்கிங்... கோவை மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்!

  வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு டெபாசீட் பணமான 10 ஆயிரத்தை மறந்து வந்தார், பின்பு அவரது உதவியாளர் பணத்தை கொண்டு வந்து கொடுத்தார். அதனைப் பெற்று மனு தாக்கல் செய்தார் பத்மப்ரியா, இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Published by:Suresh V
  First published: