தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு

தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு

கமல்ஹாசன்- பொன்ராஜ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஸ் ஆகியோரை நேரில் சந்திக்க இருப்பதாக கூறினார் பொன்ராஜ்.

 • Share this:
  அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் பொன்ராஜ் தங்கள் கூட்டணிக்கு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் வரவேண்டும் என்று கூறி அழைப்பு விடுத்துள்ளார்.

  மேலும், கூட்டணி குறித்து பேசுவதற்காக விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் எல்.கே.சுதீஸ் ஆகியோரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களுக்கும் அதற்கு இணையாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது தேமுதிக. ஆனால், 15 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்படுகின்றது.

  இந்நிலையில், இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டார்.

  Must Read : அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக - விஜயகாந்த் அறிவிப்பு

   

  இந்நிலையில், தங்கள் கூட்டணிக்கு வருமாறு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.
  Published by:Suresh V
  First published: