MAKKAL NEEDHI MAIAM ANNOUNCED 3000 RUPEES FOR HOME MAKER SKD
வீட்டு வேலை மட்டும் செய்யும் இல்லத்தரசிகளுக்கு ரூ.3,000: படித்த மகளிருக்கு வேலைவாய்ப்பு - மக்கள் நீதி மய்யம் வாக்குறுதி
தேர்தல் அறிக்கை வெளியிடும் கமல்ஹாசன்
வீட்டு வேலை மட்டும் செய்யும் இல்லத்தரசிகளுக்கு மதிப்பு உரிமைத் தொகையாக 3,000 ரூபாய் வழங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைமுன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் மக்கள் நீதி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தேர்தல் வாக்குகுறுதிகளில் முக்கிய வாக்குறுதிகளை கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அப்போது பேசிய அவர், ‘வீட்டுப் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய், 1,500 ரூபாய் என்பதை எதை வைத்து நிர்ணயம் செய்தீர்கள். இல்லத் தரசிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். மக்கள் கேண்டின் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதில், ராணுவ கேண்டின் போல, நியாயமான விலையில் மக்களுக்கு பொருள்கள் வழங்கப்படும். வாஷிங்மெஷின் கொடுத்து அதன் பில் மக்கள் தலையிலேயே ஏற்றப்படுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒரு அமைப்பாக கொண்டுவர வேண்டும் என்பது எங்களது ஆசை. தற்சார்பு கிராமங்களை உருவாக்குவோம். சிறுகுறு தொழில்களுக்கான மூலப் பொருள்களை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல, ‘தமிழக அரசுடன் அரசின் திட்டங்களையும் சேவைகளையும் மக்கள் உடனுக்குடன் பெறுவதற்கும் அரசுக்கும் மக்களுக்கும் நேரடி இணைப்பாக இருப்பதற்கும் வீட்டுக்கு ஒரு கணினி வழங்கப்பட்டு E-Governance முறையில் மக்களுக்கும் அரசும் நேரடி தொடர்பில் இருப்பதை உறுதி செய்யப்படும். படித்த மகளிருக்கு GIG Workers வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இதன்மூலம் அவர்கள் ஓய்வு நேரத்தில் குறைந்தது ரூ.1,000 முதல் ரூ.20,000 சம்பாதிக்க வழி வகை செய்யப்படும். அதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். வீட்டு வேலை மட்டும் செய்யும் இல்லத்தரசிகளுக்கு மதிப்பு உரிமைத் தொகையாக 3,000 ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.