மக்கள் நீதி மய்யமும் திராவிட கட்சியின் அங்கம்தான்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யமும் திராவிட கட்சியின் அங்கம்தான்: கமல்ஹாசன்

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யமும் திராவிட கட்சியின் அங்கம்தான் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.

  • Share this:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்றாவது கட்டமாக திருச்சியில் பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசன், காஜாமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் பாசறையினரை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் உள்ளதாகவும், விரைவில் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடவுள்ளதாகவும் கூறினார்.

குறிப்பாக, திருச்சியில் நேற்று முன்தினம் (27ம் தேதி) கமல்ஹாசனும் நேற்றைய தினம் திமுக இளைஞரணிச் செயலாளர்  உதயநிதியும் பிரச்சாரம் செய்தனர். இதற்காக திருவெறும்பூர் பகுதியில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு 2 கட்சி கொடிகளும் ஒரே வரிசையில் அணி வகுத்திருந்தன. இது  ஏதேச்சையாக அமைந்தாலும் எதிர்காலத்தில் இயல்பாக நடக்கவும் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகின்றது. ஏனெனில் கமல் விரும்பும் இடதுசாரிகளும் திமுக கூட்டணியில்தான் உள்ளனர் என்கிறார்கள் மநீம நிர்வாகிகள்.

கமல், உதயநிதி இருவரின் பிரச்சாரத்திலும் அதிமுக எதிர்ப்பும் ஊழல் எதிர்ப்பும் சற்று தூக்கலாகவே உள்ளது. ஊழல் பட்டியல் வாசிப்பும் தொடர்கிறது. கமலும் திமுகவை பெரிதாய் விமர்சிப்பதில்லை. எம்.ஜி.ஆர் பற்றி பேசினாலூம் கருணாநிதியை. தேவைப்படும் போது சொல்வோம். மநீமவும் திராவிடக் கட்சிதான் என்கிற கமலின் வார்த்தைகள். வெறும் வார்த்தைகள் அல்ல கூட்டணிக்கான சமிக்ஞைகள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

திரைமறைவில் திமுகவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையை தவிர்த்து, வேறு எந்த கட்சியுடன்  மக்கள் நீதி மய்யம் இன்னும் கூட்டணி குறித்து வாய் திறக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. முன்னாள் காவல்துறை அதிகாரியான மவுரியா, சி.கே.குமரவேல் உள்ளிட்ட மநீம முக்கிய நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணியை விரும்பி வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல், கமலுக்கு ஆலோசனை வழங்கும் சங்கையா குழுவை நிர்வகிக்கும் விஜய் டிவி மகேந்திரன், மக்கள் நீதி மய்யத்தை எப்படியாவது திமுக கூட்டணியில் சேர்த்துவிட வேண்டும் என முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், துணைத் தலைவர் மகேந்திரன் மட்டும் திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பதில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே மேல் என கமலிடம் சொல்லியதாகவும் அவரோ 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம் என்கிற எண்ணத்திலேயே பணியாற்றுங்கள், கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் தனது நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறார். எனவே, இப்போதைய கள சூழலை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள்.

இது புறமிருக்க சட்டப்பேரவைக்குள் கமல் அடி எடுத்து வைப்பதற்கான அடித்தளத்தையும் ஒருபக்கம் அமைத்து வருகின்றனர்.  இதன்படி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் கமல் போட்டியிடுவது உறுதி. அதில் ஒன்று தலைநகர் சென்னையில் உள்ள வேளச்சேரி. மற்றொன்று திருச்சி, மதுரை, கோவை என்று பேசப்பட்டாலும் மதுரை அல்லது கோவையில் ஒரு தொகுதி உறுதி என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர்

அதன்பின் தஞ்சையில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய கமல், தனியார் மண்டபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, எம்ஜிஆர் கொடுத்த தமிழ் பல்கலைக்கழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுப்போம். சரஸ்வதி மஹால் நூலகம் முழுவதும் களவு போகும் முன் அதை மீட்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். உலகிலேயே மிக எடை குறைவான செயற்கைக்கோளை உருவாக்கிய தஞ்சையை சேர்ந்த மாணவன் ரியாஸ்தீனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: