பாஜக-அதிமுக கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - மக்கள் அதிகாரம்

பாஜக-அதிமுக கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - மக்கள் அதிகாரம்

ராஜு, மக்கள் அதிகாரம்

பாஜக, அதிமுக கூட்டணியை தேர்தலில் வீழ்த்த நாங்கள் தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்வோம். எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள்.

  • Share this:
    பாஜக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளையும், ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் பெரியாரிய, திராவிட சித்தாந்தத்தை அழிக்க முயற்சிக்கும் கமல், சீமான் போன்றோரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீ தலைமையில் நடந்த கூட்டத்தில் அவ்வமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கான திட்டங்களையும், காவி பாசிசத்தையும் அமல்படுத்தி வரும் பாஜக வையும் அவர்களோடு கூட்டணி வைத்துள்ள அதிமுக, பாமக மற்றும் அவர்களின் மற்ற கூட்டணி கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதே போலஊழல் ஒழிப்பு என்ற பெயரில் பெரியாரிய திராவிட கருத்துக்களை அழிக்க பாஜக விற்கு ஆதரவாக செயல்படும் கமல்ஹாசன், சீமான் போன்றோரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். கார்ப்பரேட்,காவி பாசிசத்தை நிரந்தரமாக ஒழிப்பதற்கு பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரி, சிறுபான்மை சக்திகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு தொடர்ந்து போராட வேண்டும்.

    பாஜக விற்கு தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத நிலையில் கடந்த ஐந்தாண்டுகளாக அதிமுக மூலம் பாஜக தான் தமிழகத்தை ஆட்சி செய்து மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. தற்போது மொத்த தமிழகத்தையும் அடிமையாக்கும் திட்டத்துடம் பாஜக அதிமுக உடன் கூட்டணி வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறது. எனவே தமிழக மக்கள் பாஜக-அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் போடப்பட்டது.

    பின்னர் தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜீ,
    பாஜக, அதிமுக கூட்டணியை தேர்தலில் வீழ்த்த நாங்கள் தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்வோம். எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள். பாஜக மேல் தமிழக மக்கள் கொண்டுள்ள அதிருப்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்பட்டது.

    Must Read : மக்கள் நீதி மய்யக் கூட்டணியின் முதற்கட்ட வேட்பளார் பட்டியல் இன்று வெளியிடப்படும்.. கமல்ஹாசன்.

     

    அதே போல வரும் சட்டமன்ற தேர்தலிலும்  பாஜக கூட்டணியை தோற்கடிக்க எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய போவதில்லை மாறாக பாஜக அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் தோல்வி அடைய செய்ய வேண்டும் என பிரச்சாரம் செய்வோம் என்றார்.
    Published by:Suresh V
    First published: