Home /News /tamil-nadu /

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிப்பு... கல்லூரி மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிப்பு... கல்லூரி மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிப்பு... கல்லூரி மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிப்பு... கல்லூரி மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

பைராலிசிஸ் எனப்படும் வெப்பத்தால் பகுப்பு முறையில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் பெட்ரோலை தயாரிக்கலாம் என்கிறார் மாணவர் கார்த்திக்.

    வீணாக எறியப்படும் பொருட்களில் இருந்து எரிபொருள் தயாரிக்கலாம் என்கிறார் பழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர். பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் அவரது புதிய கண்டுபிடிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.. 

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் வேதியியல் முதுநிலை இறுதி ஆண்டு படித்து வரும் இவர், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.

    உலக அளவில் ஆண்டொன்றுக்கு 360 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாவதாகவும், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு முப்பத்தி ஏழு லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாவதாகவும் கூறும் கார்த்திக், மண்ணுக்கு நஞ்சாக மாறும் இந்த கழிவுகளை மாற்று எரிபொருளாக உருவாக்கினால் என்ன என்று சிந்தித்திருக்கிறார்.

    அதன் விளைவாக இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சி தற்போது வெற்றி அடைந்திருப்பதாகக் கூறுகிறார். பைராலிசிஸ் எனப்படும் வெப்பத்தால் பகுப்பு முறையில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் பெட்ரோலை தயாரிக்கலாம் என்கிறார் கார்த்திக்.

    இந்த பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு 58 கிலோமீட்டர் வரை இருசக்கர வாகனம் இயங்கும் என்றும் தெரிவித்த கார்த்திக், தற்போது பரிசோதனை நிலை என்பதால் தயாரிக்கப்படும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்.

    Must Read : விரைவில் தேசிய அளவில் ஸ்டாலின் மாற்றத்தை கொண்டு வருவார் - திமுக எம்.பி திருச்சி சிவா பேச்சு

    இதனை பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது, பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் கிடைக்கும் எரிவாயுவை சமையலுக்கும், இந்த செயல்முறையில் இறுதியாக கிடைக்கும் மட்டு எனப்படும் கழிவுகளை சாலை அமைப்பதற்கும் உபயோகிக்கலாம் என்றும் கூறுகிறார். ஒரே செயல்முறையில் வெவ்வேறு விளைபொருட்கள் கிடைப்பதால் காலப்போக்கில் விலை குறையும் என்கிறார்.


    தனது முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளித்து, இதுகுறித்த ஆய்வுகளை தொடர்ந்து நடத்த தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார். 
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Palani, Petrol, Plastics

    அடுத்த செய்தி