தமிழை புகழ்ந்தால் மட்டும் போதுமா? ஆட்சி மொழியாக அறிவிக்க கொங்கு ​ஈஸ்வரன் கோரிக்கை!

தமிழ் குறித்து பிரதமர் பெருமிதம்

தமிழ் மொழியை சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஆட்சி மொழியாக பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிப்பதில் பிரதமருக்கும், ஒன்றிய அரசுக்கும் தயக்கம் ஏன் என கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    தொன்மையான மொழியான தமிழை பாரத பிரதமர் புகழ்வதோடு மட்டும் அல்லாமல் ஆட்சி மொழியாகவே அறிவிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக  ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றிய பாரத பிரதமர் மோடி நான் தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி என்றும், தமிழ் மொழி குறித்து மிகவும் பெருமை அடைகிறேன் என்றும் பேசியிருக்கிறார். பிரதமர் மோடி  திருவள்ளுவருக்கு புகழ் சேர்ப்பதையும்,  திருக்குறளை பயன்படுத்துவதையும்,  தமிழ் மொழியை பற்றி  பேசுவதையும் மனதார வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்: மாநில அரசுகளுக்கு கெடு விதிப்பு!

    அதேவேளையில், பெயரளவில் மட்டும் தமிழ் மொழியின் பெருமையை குறிப்பிட்டு பேசி வருகிறாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை என தெரிவித்துள்ள ஈஸ்வர, “ உலகின் தொன்மையான மொழி தமிழ் என இன்னும்  பல்வேறு விஷயங்கள் தமிழ் மொழியினை பற்றி அறிந்து வைத்துள்ள பிரதமர் மோடி தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்நேரம் அறிவித்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழ் மொழியின் சிறப்புகளை பற்றி பேசினால் போதுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,  “ தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவித்து தமிழ் மொழிக்கு மென்மேலும் சிறப்பு சேர்க்க வேண்டும். அதற்கான முயற்சியை பிரதமர் மோடி செய்திருக்க வேண்டும். தமிழ் மொழியை சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஆட்சி மொழியாக பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிப்பதில் பிரதமருக்கும், ஒன்றிய அரசுக்கும் தயக்கம் ஏன்” என்று வினா எழுப்பியுள்ளார்.

    மலேசியா, மொரிசியசு உள்ளிட்ட நாடுகளில் தமிழை பண்பாட்டு மொழியாக பயன்படுத்தி பெருமை சேர்த்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஈஸ்வர,  “ இந்திய ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. வானளாவிய புகழ்பெற்ற தமிழ் மொழியை பிரதமர் மோடி பேச்சுக்கு மட்டும் பயன்படுத்தாமல் இந்திய ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்க முன்வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published: