Home /News /tamil-nadu /

தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவதை உறுதி செய்க: சென்னை ஐஐடிக்கு அமைச்சர் பொன்முடி கடிதம்

தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவதை உறுதி செய்க: சென்னை ஐஐடிக்கு அமைச்சர் பொன்முடி கடிதம்

ஐ.ஐ.டி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி. இயக்குநருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஐ.ஐ.டி.-யில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    கடந்த 20ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற 58வது பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பட்டது சர்ச்சையானது.

    இதையடுத்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசு தான் 1959ஆம் ஆண்டு ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு கல்லூரி அமைக்க 250 ஹெக்டேர் இடம் வழங்கியது. அது முதல் ஐ.ஐ.டி. க்கு பல்வேறு உதவிகள், சலுகைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து வந்துள்ளது.

    ஐ.ஐ.டி-யில் அமையவுள்ள கிரையோ எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் அமைக்க 10 கோடி ரூபாய் நிதியுதவி கேட்டு, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக பரீசிலனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றமடைய செய்துள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து ஒன்றிய அரசு, மாநில அரசு நிகழ்ச்சிகளிலும், பிரதமர், குடியரசு தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் கூட தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது நீண்டநாள் மரபாக இருக்கும் போது, ஐ.ஐ.டி-யில் நடைபெறும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து வருங்காலத்தில் இடம்பெறுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai IIT, Minister Ponmudi

    அடுத்த செய்தி