ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.. தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வைகோ கோரிக்கை

அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.. தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வைகோ கோரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலனை செய்து, பணி நிரந்தரம் செய்து தை திருநாள் பொங்கல் பரிசாக 12 ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்றிட வேண்டும் - வைகோ

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு பள்ளிகளில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில், பத்தாண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை உள்ளிட்ட 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட பல வருடங்களாக கோரி வருகிறார்கள்.

ஏழை, எளிய, அடித்தட்டு, விளிம்பு நிலையில் இருக்கின்ற பட்டதாரி ஆசிரியர் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலனை செய்து, பணி நிரந்தரம் செய்து தை திருநாள் பொங்கல் பரிசாக 12 ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்றிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: MDMK, Vaiko