உள்ளாட்சி தேர்தலில் உளவியல் ரீதியாக
அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் எனவும், இந்த உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க முடியாது என்ற உளவியலை அ
திமுகவினருக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.
கோவை காளப்பட்டி சுகுணா மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். கூட்டத்திற்கு பின்னர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில நகர்புற போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உள்ளாட்சி தேர்தலுக்காக இன்று துவங்கும் விருப்பமனு வரும் 19 ம் தேதி வரை நடைபெறும் எனவும், யார் வேண்டுமானாலும் விருப்பமனு தாக்கல் செய்யலாம் எனவும், அதே வேளையில் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களவ தவிர மற்றவர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிர் வரிசையில் நின்று பிரச்சினை ஏற்படுத்தினால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர்,நம்மை பார்த்து எதிரிகள் பயப்பட வேண்டும் எனவும், எதிரிகள் என்ன செய்கின்றனர் என்பதை பார்த்து முனுமுனுப்பது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி ,நகராட்சி, பேரூராட்சிகளின் 275 வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்த அவர்,உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 2298 வாக்கு சாவடிகள் இருக்கின்றது, ஒரு வாக்கு சாவடிக்கு பூத் கமிட்டி அமைத்து 12 பேர் வீதம் கட்டாயம் பணியாற்ற வேண்டும் எனவும்,4 நாட்களில் பூத் கமிட்டி உருவாக்கிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வன்னியர் உள் இடஒதுக்கீட்டால் 69% இடஒதுக்கீடு விதிகள் மீறப்படாது: தமிழக அரசு
மேலும் வரும் 22ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவையில் நல திட்ட நிகழ்வுகள் வழங்க வருகின்றார் எனவும், ஒரு லட்சம் பேர் திரண்டு முதல்வரை வரவேற்க வேண்டும் எனவும்,பூத்திற்கு 50 பேரை கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.நம்ம தான் ஆளுங்கட்சி, நம்முடைய முதல்வர் ஸ்டாலின், நம்மை கண்டுதான் எதிரிகள் பயப்படனும் எனவும், அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், நாம் இரண்டு அடி எடுத்து வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய துணை பொது செயலாளர் ஆ.ராசா , திமுகவிற்கு செந்தில் பாலாஜி வந்த போது முதலில் தயக்கம் இருந்தது எனவும், ஆனால் தலைவரின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும், தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என அவர் தீவிரமாக செயல்படுகின்றார் எனவும் தெரிவத்தார். கோவை மாவட்டம் ஏன் தோற்றது என்ற தகவல் எல்லாம் தலைவருக்கு தெரியும் என கூறிய ஆ.ராசா,திமுகவிற்கு எதிர் கருத்தை பரப்பும் நிலை எப்போதுமே இருந்து வருகின்றது என தெரிவித்தார்.
மேலும் படிக்க: பூதக்கண்ணாடி அணிந்து குற்றம் பார்க்கக்கூடாது: அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம்!
இந்தியாவில் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கின்றார் எனவும்,இந்த முறை மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை ஸ்டாலினுக்கு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.இந்த மாவட்டத்தில் முன்பு ஒரு அமைச்சர் இருந்தார் என மறைமுகமாக எஸ்.பி.வேலுமணியை குறிப்பிட்ட அவர், முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
உளவியல் ரீதியாக அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் எனவும் இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவால் ஜெயிக்க முடியாது என்ற உளவியலை அதிமுகவினருக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.