Home /News /tamil-nadu /

சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் முக்கிய கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - தமிழக அரசு விளக்கம்

சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் முக்கிய கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - தமிழக அரசு விளக்கம்

மெட்ரோ ரயில் பணிகள்

மெட்ரோ ரயில் பணிகள்

Chennai Metro Rail : சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் கோயில் கட்டுமானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக அரசு உறுதியளித்தது.

    சென்னை மெட்ரோ ரயிலின் 4ஆம் வழித்தட பணிகளால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 7 முக்கிய கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான நான்காம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

    இதனால் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயில், வடபழநி முருகன் கோயில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில் கட்டுமானங்கள் பாதிக்கப்படும் என்றும், தேர் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்த தடை ஏற்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, மெட்ரோ பணிகளால் கோயில் கட்டுமானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்தது.

    Must Read : அதிமுக பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? - தனித் தீர்மானம் இன்று இறுதி செய்ய வாய்ப்பு

    வணிக பயன்பாட்டுக்கான கோயில் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது என்ற அரசின் விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai metro, Metro Rail, Temple

    அடுத்த செய்தி