தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - சென்னைக்கு புதிய காவல் ஆணையர்

8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.ஜி.,யாகவும், 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - சென்னைக்கு புதிய காவல் ஆணையர்
ஏ.கே விஸ்வனாதன் | மகேஷ் குமார் அகர்வால்
  • News18
  • Last Updated: July 1, 2020, 7:15 AM IST
  • Share this:
சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஷ்வநாதன், மதுரை காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிரடி அதிகாரிகள் மாற்றத்தில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.ஜி.,யாகவும், 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

குறிப்பாக சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஏ.கே., விஸ்வநாதன், காவல் துறை செயலாக்கம் ஏ.டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக காவல்துறை செயலாக்க டிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேபோல மதுரை காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையராக(தெற்கு) இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மண்டல ஐ.ஜி., யாக இருந்த அமல்ராஜ் சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையராகவும்; சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையராக இருந்த ஜெயராம் மத்திய மண்டல ஐ.ஜி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

படிக்க: இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை








பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி ரவி சிறப்பு அதிரடிப்படை(ஈரோடு) ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த பாலகிருஷ்ணன் சென்னை காவல் துறையின் வடக்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் உட்பட 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதேபோல சென்னை பூக்கடை காவல் மாவட்ட துணை ஆணையர் ராஜேந்திரன், அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் முத்துசாமி உட்பட 9 ஐ.பிஎ.ஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.  மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன், ஐ.ஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் தொழில்நுட்ப சேவை துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், கோவை சரக டி.ஐ.ஜியாக நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading