தேர்தலில் போட்டியிடும் பிரபலங்களின் சொத்து விபரங்கள்!

தேர்தலில் போட்டியிடும் பிரபலங்களின் சொத்து விபரங்கள்!

கார்த்திக் சிதம்பரம் மற்றும் கனிமொழி

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு, 50,97,000 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும், 77,90,000 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள முக்கிய பிரபலங்கள் தங்களது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு 22.90 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. அசையும் சொத்துக்கள் 24.14 கோடி ரூபாய் என வேட்பு மனு தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுத்தாக்கலில், 17.49 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும், 11.42 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் இருந்தன. கார்த்தி சிதம்பரத்தின் சொத்து மதிப்பு தற்போது, 18 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு, 8.92 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும், 21.16 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.92 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும், 12,144 ரூபாய் கையில் ரொக்கம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு, 1.46 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 14,87,000 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. கடந்த தேர்தலில் தாக்கல் செய்த சொத்து விவரங்களே இந்த தேர்தலிலும் தாக்கல் செய்துள்ளார்.

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவுக்கு, 50,97,000 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும், 77,90,000 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலின் போது தாக்கல் செய்த மனுத்தாக்கலில் 22,17,000 அசையும் சொத்துக்களும், 44,29,000 ரூபாய் அசையா சொத்துக்களும் உள்ளன. எச்.ராஜாவின் சொத்து மதிப்பு 66,46,000 ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.

தேனியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது பெயரில் 2.33 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், 3.23 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 64,27,000 ரூபாய் கடன் உள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 48 ஆயிரம் ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், அசையும் சொத்துக்களாக 18,27,000 ரூபாயும், அசையா சொத்துக்களாக ரூ.58,71,000 சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடனாக 3,94,000 ரூபாய் உள்ளதாக திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், தனது பெயரில் 13.9 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்தும், 41.87 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்தும் உள்ளதாக கூறியுள்ளார்.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சொத்து மதிப்பு 417.49 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. 230.49 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், அசையா சொத்துக்களின் மதிப்பு 187 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் வைப்புத் தொகையாக 13.41 கோடி ரூபாய் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலைவிட தற்போது வசந்தகுமாரிடம் அசையும் சொத்தின் மதிப்பு 131.77 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: