• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய திருப்பம்!

சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய திருப்பம்!

சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய திருப்பம்!

சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய திருப்பம்!

கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள்  உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம் (34) மற்றும் அவரது மகள் தர்ஷினி (7) இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 12ந்தேதி சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த போது திடீரென இருவரும் மயங்கி விழுந்தனர்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலன் இல்லமால் தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கிரேவி, குளிர்பானம் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்த நிலையில் கற்பகம் வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் (34) என்பவர் கற்பகத்திற்கு தன்னுடன் இருக்கும் படி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், ஏற்கனவே கற்பகத்திற்கும், வீரப்பெருமாளுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதன் பின்னர் கற்பகம் வீரப்பெருமாளுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

சிக்கன் கிரேவி, கூல்டிரிங்ஸ்


எனினும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது எடுத்த படம் மற்றும் வீடியோவை வைத்து வீரப்பெருமாள் மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது. தாய்,மகள் இறந்த அன்றும் வீரப்பெருமாள் தொடர்ச்சியாக கற்பகத்திற்கு வாட்ஸ் அப் மூலமாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் படம் மற்றும் வீடியோ காண்பித்து விட்டால் அவமானம் ஏற்பட்டு விடும் என்ற கருதிய கற்பகம் சாப்பிட்ட சாப்பாடு அல்லது குளிர்பானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. போலீசார் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: