சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு

சென்னை மாநகர காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு
மகேஷ்குமார் அகர்வால் மற்றும் ஏ.கே.விஸ்வநாதன்
  • Share this:
காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முன் தினம் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து அப்பதவிக்கு தமிழக ஆபரேஷன் பிரிவு டிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து புதிய காவல் ஆணையர் மகேஷ் குமாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஏ.கே.விஸ்வநாதன் இன்று விடைபெற்றார்.பதவி பொறுப்பேற்றப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மகேஷ்குமார் அகர்வால், காவல்துறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் காவலர்களுக்கு புதுவித பயற்சிகள் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

Also read... மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி முடிவு - 9 மாவட்டங்களில் காய்கறிகளின் விலை உயரும் அபாயம்

பொது மக்கள் அளிக்கும் புகார்கள் மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அகர்வால் சைபர் குற்றங்கள் தடுக்கப்படும் என்றும் கூறினார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading