காவல்துறையினர் 100 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்

காவல்துறையினர் 100 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்

மாதிரிப் படம்

காவல்துறையில் புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    காவல்துறையில் புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ்குமார் அகர்வால், “கொரோனா தொற்றுப் பரவலின் ஆரம்பக் கட்டத்தில் மக்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வு இல்லை. என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இப்போது, அவர்களுக்கு கொரோனா குறித்து தெரிந்திருக்கிறது. இருந்தாலும், மக்கள் சோர்வடைந்து இருக்கின்றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். முகக்கவசத்தை அகற்றக் கூடாது. அப்போதுதான், நாம் கொரோனா தொற்றைத் தடுக்க முடியும்.

    சென்னையில் காவல்துறை தரப்பில் இதுவரை சுமார் 3,300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிதாக சுமார் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டு தனிமையில் இருக்கின்றனர். காவல்துறையில் சுமார் 7,000 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நேற்று மட்டும் 700 காவல்துறையினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் முகக்கவசம் வைத்திருந்தும், அதனை அணியமால் இருக்கின்றனர். நாம் எச்சரித்தால்தான் போடுகின்றனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன" என்று கூறினார். அப்போது, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.

    Must Read :  சென்னையில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் ஒரே நாளில் 6,703 பேருக்கு தொற்று உறுதி!

     

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,703 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2,105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் ஒரே நாளில் 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 879 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: