• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • காந்தியின் அடையாளத்தை மாற்றிய நாளின் நூற்றாண்டு விழா இன்று!

காந்தியின் அடையாளத்தை மாற்றிய நாளின் நூற்றாண்டு விழா இன்று!

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

அப்போது காந்தி அணிந்திருந்து குஜராத்திகளுக்கு உரித்தான தலைப்பாகையுடனான மிடுக்கான ஆடை.  நாட்டில் பெரும்பாலான மக்கள் உடுத்த உடைக்கூட இல்லாத நிலையில் ஆடம்பர உடைகளை அணிய அவரது மனம் மறுத்தது

 • Share this:
  ஆங்கிலேயே அரசிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவை விடுதலை பெறச் செய்வதற்காக தனது வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த மகாத்மா காந்தியடிகள், அரை ஆடைக்கு மாறி இன்றோடு 100 ஆண்டுகள் ஆகிறது. அவரது இந்த மாற்றம் நிகழ்ந்த இடம் தமிழகத்தின் மதுரை.

  இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பெயர் மகாத்மா காந்தி. ஆயுதங்கள் மூலமே விடுதலை என அதுவரை இருந்த கேட்பாடுகளை உடைத்து ‘அகிம்சை’  மூலம் இந்தியாவின் விடுதலையை சாத்தியமாக்கியவர் காந்தியடிகள். அவரது பாதையை பின்பற்றி  நிறவெறிக்கு எதிராக அகிம்சை வழியில் வென்று காட்டினார் நெல்சன் மண்டேலா.

  காந்தியடிகளின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய நாட்களில் முக்கியமானவை ஜூன் 7, 1893 மற்றும் செப்டம்பர் 22, 1921.  ஆப்பிரிக்காவுக்கு படிக்க சென்ற  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வெள்ளையர்கள் பயணிக்கும் ரயில் பெட்டியில் பயணித்ததாக  பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட நாள்தான் ஜூன் 7, 1893.

  சுதந்திர போராட்டத்திற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவந்த காந்தியடிகள். நாட்டின் இல்லாமையை புரிந்துகொண்டு தன்னை மாற்றிக்கொண்ட தினம் தான் செப்டம்பர் 22, 1921.  ஒத்துழையாமை  இயக்கத்த்தின்போது அன்னிய ஆடைகளை புறக்கணிக்கும்படி நாட்டு மக்களிடம் காந்தியடிகள் கேட்டுக்கொண்டார்.  ஆனால், இந்தியாவில் துணி நெய்யும்  கருவிகள் போன்ற போதிய வளங்கள் அன்னிய ஆடைகளுக்கு மாற்று ஏற்படுத்துவது கடினம் என்பதை விரைவிலேயே அவர் உணர்ந்தார்.  இந்நிலையில், செப்டம்பர் 21, 1921ம் ஆண்டு அன்றைய மதராஸ் மாகாணத்துக்கு உட்பட மதுரைக்கு காந்தியடிகள் விஜயம் செய்தார்.  ரயில் நிலையத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து காந்திக்கு வரவேற்பு அளித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இடுப்பில் வேட்டி மட்டுமே அணிந்திருந்தனர். இதற்கான காரணத்தை காந்தி தேடியபோது அவருக்கு கிடைத்த பதில் இல்லாமை.

  இதையும் படிங்க: "மதுரை எனது தாய் நிலம்" - காந்தியின் பேத்தி நெகிழ்ச்சி!!


  அப்போது காந்தி அணிந்திருந்து குஜராத்திகளுக்கு உரித்தான தலைப்பாகையுடனான மிடுக்கான ஆடை.  நாட்டில் பெரும்பாலான மக்கள் உடுத்த உடைக்கூட இல்லாத நிலையில் ஆடம்பர உடைகளை அணிய அவரது மனம் மறுத்தது.  மதுரை மேலமாசி வீதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மகாத்மா காந்தி , தனது உடை விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அன்றைய இரவு முடிவு செய்தார்.

  அடுத்த நாள், செப்டம்பர் 22, 1921ல்  வெறும் வேட்டியுடன் மக்கள் முன்பு தோன்றிய காந்தியடிகள், தனது உடலை மறைத்துக்கொள்ள இதுபோதும் என்று கூறினார். அதன்பின்னர் தனது வாழ்நாள் முழுவதும் வேட்டியுடனே அவர் இருந்தார். காந்தியின் அடையாளங்களில் ஒன்றாகவும்  அவரது எளிய உடை ஆனது. காந்தியடிகள் அரை அடைக்கு மாறி இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: