• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை பார்த்து வியந்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை பார்த்து வியந்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்!

 தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை பார்த்து வியந்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை பார்த்து வியந்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து நாங்களும் கற்றிருக்கிறோம் என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக குடியரசு தலைவரிடம் யார் சென்று பேசுவது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும், தேவைப்பட்டால் மசோதாவுக்கு அழுத்தம் தருவதற்கான முயற்சியை தமிழகம் செய்யும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மருத்துவக் கட்டமைப்பு, கொரோனா தொற்றை கையாண்ட விதம், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாட, மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தலைமையில், அம்மாநில சுகாதார செயலர் மேரி நீலிமா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை DMS வளாகத்தில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
இந்நிகழ்வுக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது, தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை கண்டறிவதற்கு மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வருகை தந்துள்ளார். மக்களை தேடி மருத்துவத்தை மகாராஷ்டிராவில் செயல்படுத்த உள்ளதாகவும்,
இந்த திட்டம் தன்னை கவர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Also read: பேரவையில் நீட் மசோதாவை ஆதரித்த அதிமுக, பாமக.. பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறியது என்ன?

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தியத்தை கேட்டு பிரம்மித்தார்கள் என அவர் தெரிவித்தார்.

ஆ.ராசா பேசிய ஆடியோ தொடர்பான கேள்விக்கு? நீட் தேர்வை பொறுத்தவரை அதில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது திமுகவின் பிரதான கொள்கை. நிச்சயம் குடியரசு தலைவர் இதனை புறம் தள்ள வாய்ப்பு இல்லை எனவும், நிச்சயம் தமிழக அரசின் இந்த முயற்சிக்கு ஒன்றிய அரசு இறங்கி வரும் என்று எதிர் பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

தமிழக மக்கள் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு நேற்று தடுப்பூசி செலுத்தினர். கூடுதலாக நம்மிடம் தடுப்பூசி இருந்திருந்தால் 50 லட்சம் பேருக்கு கூட போட்டிருக்கலாம்.  நம்மிடம் தடுப்பூசி இருந்தால் தினமும் கூட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடலாம். தடுப்பூசி கேட்டு மீண்டும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அப்படி தடுப்பூசி வந்தால் மீண்டும் ஒரு மெகா கேம்ப் நடத்துவோம் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தொடர்பாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை நாங்கள் ஆளுநருக்கு அனுப்புவோம், அதை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்புவார்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக குடியரசு தலைவரிடம் யார் சென்று பேசுவது என்பது குறித்தும், தேவை பட்டால் மசோதாவுக்கு  அழுத்தம் தருவதற்காக முயற்சியை தமிழகம் செய்யும்.நல்லதே நடக்கும் என்று நம்புவோம் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் கூறியதாவது, தமிழகத்தில் மருத்துவத்துறை சிறந்து விளங்குகிறது. பலவற்றை நாங்கள் இங்கிருந்து கற்றிருக்கிறோம். குறிப்பாக மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்து வழங்கும் 'தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்' எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள்  அமைக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து நாங்களும் கற்றிருக்கிறோம். எங்கள் மாநிலத்திலும் கூடுதல் மருத்துவ கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுப்போம்.  தமிழ்நாடு மருத்துவப்  பணிகள் கழகம்  தனித்துவம் மிக்க பல பணிகளை செய்து வருகிறது என்று அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: