ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மஹாளய அமாவாசை: ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்த அமைச்சர்!

மஹாளய அமாவாசை: ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்த அமைச்சர்!


தர்ப்பணம் கொடுக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் (சிகப்பு துண்டு, வேட்டியுடன் இருப்பவர்)

தர்ப்பணம் கொடுக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் (சிகப்பு துண்டு, வேட்டியுடன் இருப்பவர்)

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மஹாளய அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு ஏராளமானோர் இன்று திதி கொடுத்தனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தர்ப்பணம் கொடுத்தார்.

  இறந்த முன்னோர்களுக்காக ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையில் அக்னி தீர்த்த கரைகளில் திதி கொடுப்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் மஹாளய  அமாவாசையான இன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டது.

  காசிக்கு நிகராக கருதப்படும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்திற்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் திரண்டனர். அதிகாலையில் புனித நீராடிய மக்கள், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் வழிபாடு நடத்தினர்.

  காவிரி, பவானி, அமுத நதி சங்கமிக்கும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையிலும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமானோர் திரண்டதால், பரிகார மண்டபங்கள் நிறைந்து காணப்பட்டன. திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையிலும் ஆயிரக்கணக்கானோர் திதி கொடுத்தனர்.

  தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரிக் கரையில் வழிபாடு நடத்தி அரிசி, காய்கறிகள் போன்றவற்றை முன்னோர்களுக்கு தர்ப்பணமாக கொடுத்தனர்.

  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தர்ப்பணம் கொடுத்தார்.

  திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோயிலில், ஹிருதபநாசினி குளத்தின் படித்துறையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோன்று உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி, திரிபுரா மாநிலம் அகர்தலா, அசாம் மாநிலம் கயா என பல்வேறு இடங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டது.

  Published by:DS Gopinath
  First published:

  Tags: Jayalalithaa, Minister, O.S.Manian, Tamilnadu