மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்.. பக்தர்களுக்கு அனுமதியில்லை..

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்.. பக்தர்களுக்கு அனுமதியில்லை..

(படம்: tiruchirappalli.nic.in)

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அதில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

  • Share this:
கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெணையுடன் 300 மீ. பருத்தி திரியில் மகா தீபம் மாலை 5.30 மணியளவில் ஏற்றப்படுகிறது. நாளை ஏற்றப்படும் மகாதீபம் 3 நாட்களுக்கு தொடர்ந்து எரியவுள்ளது.

இதையடுத்து, 273 அடி உயரம், 417 படிக்கட்டுகள் கொண்ட மலைக்கோட்டை கோயிலுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதியில்லை. உள்ளே இருப்பவர்களும் வெளியேற்றப்பட்டு, உபயதாரர்கள், சிவாச்சாரியார்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு சிறப்பு பூஜை & மகா தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also read: நிவர் புயலில் களப்பணியாற்றிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு விருந்து வைத்த கடலூர் கலெக்டர்

மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் விஜயராணி தலைமையில் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் மலைக்கோட்டை கோயிலில் நடைபெறும் முக்கியமான ஒரு நிகழ்வாக இது இருக்கிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: