Vijayalakshmi | தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜய லட்சுமியிடம் வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட் - போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன...?

Actress Vijayalakshmi | சீமான் மற்றும் ஹரி நாடார் மீது குற்றம் சுமத்தி தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜய லட்சுமியிடம் விரைவி நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியுள்ளார்

Vijayalakshmi | தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜய லட்சுமியிடம் வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட் - போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன...?
விஜயலெட்சுமி
  • News18
  • Last Updated: July 27, 2020, 7:35 AM IST
  • Share this:
சீமான் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தவர் நடிகை விஜயலட்சுமி. அவர், சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார். சமீப மாதங்களாக சீமான் மீது பேஸ்புக் லைவ்வில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் பேசிவந்தார்.

நேற்று அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், ‘நான், எனது அம்மாவுக்கும் அக்காவுக்காவும்தான் உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது அந்த எண்ணம் இல்லை. என்னை, ஹரி நாடார் நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறி இழிவாக பேசினார். மேலும், என்னுடைய சாதி குறித்தும் பேசினார். சீமான் மீதும், ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.




இதனை அடுத்து, அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், அவர் சிகிச்சைக்காக விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், நடிகை விஜயலெட்சுமியிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


படிக்க: கொரோனா உறுதியான 3,338 பேரைக் கண்டறிய முடியாமல் திணறும் பெங்களூரூ மாநகராட்சி

படிக்க: சென்னையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி - தற்கொலை என நாடகமாடியது அம்பலம்

படிக்க: நானும், 82 வயது எனது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் - அனுபவம் பகிரும் விஷால் வீடியோ








விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் வெங்கடேசன், மருத்துவமனையில் விஜயலெட்சுமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளார். மாஜிஸ்திரேட் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள உள்ளனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading