அ.தி.மு.கவில் நிர்வாகிகள் மாற்றம்: கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக மாஃபா பாண்டியராஜன் நியமனம்
அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு துணைச்செயலாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன்
- News18 Tamil
- Last Updated: July 25, 2020, 11:36 PM IST
அ.தி.மு.கவில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்களாக, கருப்பசாமி பாண்டியன், திருப்பூர் சிவசாமி, இசக்கி சுப்பையா, புத்திச் சந்திரன், ரத்தினவேல், மருதராஜ், பி.ஜி.ராஜேந்திரன், கோ.அரி, வாலாஜாபாத், ஆசைமணி, சீனிவாசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்களாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாப்புலர் வி.முத்தையா, நடிகை விந்தியா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பலர் அவர்களது பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்களாக, கருப்பசாமி பாண்டியன், திருப்பூர் சிவசாமி, இசக்கி சுப்பையா, புத்திச் சந்திரன், ரத்தினவேல், மருதராஜ், பி.ஜி.ராஜேந்திரன், கோ.அரி, வாலாஜாபாத், ஆசைமணி, சீனிவாசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்களாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாப்புலர் வி.முத்தையா, நடிகை விந்தியா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.