• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Fastag | பாஸ்டேக் இல்லையா ரூ.50 கொடுத்துவிட்டு செல்லலாம்.. போரூர் சுங்கசாவடி ஊழியர்கள் நூதன லஞ்சம்

Fastag | பாஸ்டேக் இல்லையா ரூ.50 கொடுத்துவிட்டு செல்லலாம்.. போரூர் சுங்கசாவடி ஊழியர்கள் நூதன லஞ்சம்

பாஸ்டேக் இல்லையா ரூபாய் 50 லஞ்சம் பெற்றுக்கொண்டு வாகனத்தை கடந்து செல்ல அனுமதி அளிக்கின்றனர் போரூர் சுங்கச்சாவடி ஊழியர்கள்.

  • Share this:
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துவிட்டது. பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே பாஸ்டேக் இல்லாதவர்கள் உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பது, எரிபொருள் வீணாவது, சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை களையும் விதமாக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் முதல் கட்டாயமாக்கியது.

இதனை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் மூன்று முறை அவகாசம் வழங்கிய மத்திய அரசு, நேற்று பிப்ரவரி 16ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தபடும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. அதன்படி, சுங்கச்சாவடிகளில்  வாகனங்களில் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களும்  பாஸ்டேக் லேன்களாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாஸ்டேக் பெற்று செல்கின்றனர்.

மேலும் படிக்க... துணி உலர்த்துவதில் தகராறு.. கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழப்பு

இந்நிலையில், சென்னை போரூர் சுங்கசாவடியில் காவல்துறையினர் பாதுகாப்புடன் கட்டாய ஃபாஸ்டேக் வசூல் செய்யப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டாய ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் பொருத்தப்படாத மற்றும் ரீசார்ஜ் செய்யப்படாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் இருமடங்கு  தொகை ரொக்கமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை போரூர் சுங்கச்சாவடியில் நேற்று காலை 6 மணி முதல் 2000க்கும்  மேற்பட்ட வாகன ஓட்டிகளிடம் ரொக்கமாக இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளின் அனைத்து வழித்தடங்களிலும் கம்பிகளில் இணைக்கப்பட்ட உயர்மட்ட தானியங்கி சென்சார் பொருத்தப்பட்டுள்ள நிலையில், சென்சார் கருவிகள் பழுதடைந்துவிட வாய்ப்பு இருப்பதால் ஊழியர்கள் தனியாக சென்சார் கருவிகளையும் கைகளில் வைத்துள்ளனர். ஆனால் ஏராளமான வாகன ஓட்டிகள் பாஸ்டேக் வைத்திருந்தாலும் சரியாக வேலை செய்யாத நிலையில் வாக்குவாதம் செய்கின்றனர்.

ஃபாஸ்டேக் அட்டை இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூல்... அவதியில் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள்

பலர் காசு இல்லாத நிலையில் பேரம் பேசுகின்றனர். அப்படி பேசுபவர்களிடம் 50 லஞ்சம் பெற்றுக்கொண்டு வாகனத்தை கடந்து செல்ல அனுமதி அளிக்கின்றனர் சுங்கச்சாவடி ஊழியர்கள். ஆனால் பில் இல்லாமல் செல்ல வேண்டும் என்ற நிலையில் அலுவலகத்தில் அந்த காசை எப்படி பெறுவது என்று தெரியவில்லை என வேதனைப்படுகின்றனர் ஓட்டுநர்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: