ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உணவு டெலிவரி செய்யும் நபரை ஆபாசமாக பேசிய வாடிக்கையாளர்: போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

உணவு டெலிவரி செய்யும் நபரை ஆபாசமாக பேசிய வாடிக்கையாளர்: போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

அழைப்பை துண்டித்த வாடிக்கையாளர் பிரசாத் சாய் வெளியே வந்து ஸ்விக்கி ஊழியர் சின்ராசுவை  தகாத வார்த்தையில் திட்டியதாகவும் உணவு டெலிவரி செய்ய வந்தால் சரியாக  செய்து விட்டு செல்ல வேண்டியது தானே என்று ஒருமையில் பேசி  விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரவாயல் அருகே உணவு டெலிவரி செய்ய வந்த  ஊழியரை வாடிக்கையாளர் தவறாக பேசியதாக  சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மதுரவாயல் அருகே அடையாளம்பட்டு பகுதியில் உள்ள  கேஜி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரசாந்த் ஜாய் என்பவர்   மதியம்  சுகியில் உணவு கேட்டு ஆன்லைன் ஆர்டர் செய்துள்ளார் . ஆர்டரை எடுத்த ஸ்விக்கி ஊழியர் சின்ராசு   உணவு டெலிவரி செய்ய அடுக்குமாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது சுகி ஊழியரை பைக்குடன் உள்ளே அனுமதிக்க அடுக்குமாடியின் காவலர் மறுத்து  தடுத்துள்ளார். இதையடுத்த சின்ராசு வாடிக்கையாளரை தொலைபேசியில் அழைத்து  நடந்ததை கூறியுள்ளார். மேலும், தாங்களே  வந்து உணவைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

உடனே அழைப்பை துண்டித்த வாடிக்கையாளர் பிரசாத் சாய் வெளியே வந்து சின்ராசுவை  தகாத வார்த்தையில் திட்டியதாகவும் உணவு டெலிவரி செய்ய வந்தால் சரியாக  செய்து விட்டு செல்ல வேண்டியது தானே என்று ஒருமையில் பேசி  விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சின்ராசு சக ஊழியர்களை தொடர்புகொண்டு  நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீட்டில் புகுந்து ஆட்டம் காட்டிய பாம்பு... 3 மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறையினர்

இதையடுத்து அங்கு வந்த ஸ்விக்கி ஊழியர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு  கூடினர்.  தகாத வார்த்தையில் பேசிய  வாடிக்கையாளர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர்கள் இது தொடர்பாக மதுரவாயல் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

மேலும் படிக்க: பெண்களுக்கு எதிரான மகிளா நீதிபதி? - திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உள்ளே சென்று வாடிக்கையாளரிடம் விசாரிக்கச் சென்றபோது அவர் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக மேற்கொண்டு உரிய  விசாரனை செய்வோம் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: சோமசுந்தரம்

First published:

Tags: Food Delivery boys, Swiggy