கடனுக்கு சிகரெட் தர மறுப்பு: கடையைக் கொளுத்திய வாலிபர் கைது

மதுரை அருகே கடைக்காரர் சிகரெட் கடன் தர மறுத்த ஆத்திரத்தில் கடையை தீ வைத்து கொளுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடனுக்கு சிகரெட் தர மறுப்பு: கடையைக் கொளுத்திய வாலிபர் கைது
கடனுக்கு சிகரெட் தர மறுப்பு: கடையை கொளுத்திய வாலிபர்
  • Share this:
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பூமிநாதன். அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி பிழைப்பு நடத்தி வருகிறார். ஊரடங்கில் மிகவும் சிரமப்பட்ட பூமிநாதன், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மீண்டும் கடையை திறந்து வியாபாரத்தை துவக்கினார்.

ஊரடங்கிற்கு முன்பாக தனது கடையில் பலருக்கு கடன் கொடுத்த பூமிநாதன்; அவற்றை வசூலிப்பதிலும் புதிய கடன்கள் கொடுப்பதை தவிர்க்கலாம் என முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர், சம்பவத்தன்று இரவு 7 மணிக்கு பூமிநாதனிடம் ஒரு சிகரெட் கடன் கேட்டுள்ளார். அவரும் ஒரு சிகரெட் தானே என கடனுக்கு தந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து தனக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து அவற்றை கடையில் இறக்கி வைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த குணசேகரன், மீண்டும் ஒரு சிகரெட் கடன் தருமாறு கேட்டுள்ளார். பூமிநாதன் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தனக்கு சிகரெட் தராமல் எப்படி கடை நடத்துவாய் என எச்சரித்த குணசேகரன், அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.


வழக்கம் போல இரவில் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் பூமிநாதன். முன்பு சபதமிட்டபடி நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு தனிமையில் வந்த குணசேகரன், தனக்கு சிகரெட் வழங்காத பூமிநாதனின் கடையை தீப்பெட்டியால் தீ வைத்து எரிக்க முயற்சித்துள்ளார். மூன்று முறை முயற்சித்து நான்காவது முறையாக தீ பற்றியதும் அங்கிருந்து புறப்பட்டார்.

கூரையால் ஆன கடை என்பதால் அடுத்த சில நிமிடங்களில் கடை மளமளவென எரிந்து நாசமானது. உள்ளே இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. மறுநாள் காலை கடையை திறக்க வந்த பூமிநாதனுக்கு அந்த இடத்தில் கடை இல்லாமல் வெறும் சாம்பல் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ந்து போய், நாகமலைப் புதுக்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார்.

எஸ்.ஐ.கோபிநாத் தலைமையிலான போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து குணசேகரனை கைது செய்தனர். மதுரை  நகர் மற்றும் புறநகர் பகுதியில் குணசேகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சென்னையில் 9 நாட்களில் 5000-ஐக் கடந்த பாதிப்பு: கூடுதலாக 34,500 படுக்கைகளை தயார் செய்கிறது மாநகராட்சி

Also see...
First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading