மதுரை: 10 ஆண்டுகளாக தொடரும் பழிக்குப்பழி படுகொலைகள்.. இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை..

Youtube Video

மதுரையில் இளைஞர் ஒட ஒட விரட்டி கொலை செய்து தலை துண்டிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கொலை செய்யவந்த கும்பல் குறிவைத்த ஆள் சிக்காததால் வேறு அப்பாவி இளைஞரின் தலையை துண்டித்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் வி.கே.குருசாமி மற்றும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் மறைந்த ராஜபாண்டி இருவருக்கும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பகை இருந்துள்ளது. அரசியல் பிரச்சனை கோஷ்டி பிரச்சனையாக மாறி கடந்த பத்து ஆண்டுகளில் தங்களுக்குள்  பழிக்கு பழி தீர்த்து கட்ட தொடங்கியுள்ளனர். இந்த இரு கும்பல்களால் மதுரையில் பதினைந்திற்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ளதாக தெரிகின்றது

  கொலையில் சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் அடுத்தடுத்த அவர்களது நண்பர்கள் கொலைகளில் ஈடுபடுகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குருசாமியின் உறவினர் எம்.எஸ்.பாண்டி என்பவரை ராஜபாண்டியின் உறவினர்கள் சரமாரியாக வெட்டிபடுகொலை செய்தனர். இதற்கு பழிவாங்க குருசாமி தரப்பு நேரம் பார்த்துள்ளது.

  கடந்த ஞாயிறன்று ராஜபாண்டி தரப்பை சேர்ந்த மணிகண்டன், முனியசாமி ஆகிய இருவரையும் தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளனர் குருசாமி தரப்பு. மணிகண்டன், முனியசாமி மற்றும் இருவரது நண்பரான முருகானந்தம் ஆகியோர் கீழவெளி வீதி பகுதியில் மாலை 5.30 மணியளவில் நடந்து சென்றுள்ளனர். அப்போது திடீரென காரில் வந்த கும்பல் மூவரையும் மறித்துள்ளது. மூவரையும் துரத்திய கும்பல் கையில் வைத்திருந்த கத்தி அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கியது.

  இதில் குறிவைக்கப்பட்ட மணிகண்டன் மற்றும் முனியசாமி இருவரும் சிறிய வெட்டுகாயங்களுடன் தப்பித்து ஒடிவிட்டனர். ஆனால் சம்பந்தமே இல்லாமல் இவர்களுடன் வந்த முருகானந்தம் என்ற இளைஞரை மதுபோதையில் வந்த கும்பல் வெட்டி சாய்த்துள்ளது. வெட்டியது மட்டும் இல்லாமல் இளைஞரின் தலையை தனியாக எடுத்து வீசி சென்றுள்ளது கொடூர கும்பல்.

  சம்பவம் நடந்தது மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம் என்பதால் இதை பார்த்த பலர் அங்கிருந்து அலறியடித்து ஒடியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் கொலை நடந்த இடத்தில் கொலை செய்ய பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.

  சர்ச் வாசலில் உள்ள சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றியுள்ள போலீசார் அதில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில் கொலையாளிகள் அடையாளம் தெரியவந்தது. மதுரையை சேர்ந்த சின்ன அலெக்ஸ், அழகுராஜா, பழனி முருகன் உட்பட 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

  மேலும் படிக்க...தீவிர சிகிச்சையிலுள்ள கொரோனா நோயாளிகளை மீட்க உதவும் புரதச்சத்து.. ஆய்வில் தகவல்  அடையாளம் காணப்பட்டவர்கள் மீது கீரைத்துரை காவல்துறையினர் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் போக்குவரத்து சிக்னல் அருகே நடைபெற்றதால் கொலையின் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளன.

  கடந்த 10 ஆண்டுகளில் திமுக - அதிமுக பிரமுகர்களின் பழிக்கு பழி கொலை சம்பவங்களால், மதுரைகீரைத்துறை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளது.

  இந்நிலையில் அப்பாவி இளைஞர் ஒருவர் தற்போது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: