சீரியலில் மும்முரம் : வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் பெண் உயிரிழந்த பரிதாபம்..

சீரியலில் மும்முரம் : வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் பெண் உயிரிழந்த பரிதாபம்..
  • News18 Tamil
  • Last Updated: February 18, 2020, 12:33 PM IST
  • Share this:
மதுரையில் பக்கத்து வீட்டில் மும்முரமாக சீரியல் பார்த்துக் கொண்டிருந்தபோது தனது வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் திடீரென உள்ளே நுழைந்ததில் பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை காமராஜர்புரம் அண்ணா மேலத்தெருவை சேர்ந்தவர் 43 வயதான லட்சுமி. கணவர் ரமேஷ் உடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பிரிந்து தனி வீட்டில் வசித்து வருகிறார்.

இருவருக்குமான விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் இவரது இரு ஆண் குழந்தைகளும் கணவர் வசம் வளர்கின்றனர். லேமினேசன் கடையில் பணியாற்றி வந்த லட்சுமி, மேலத்தெருவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார்.


டிவி உள்ளிட்ட வசதிகள் அங்கு இல்லை. இதனால் வேலை முடித்து வந்த பின்னாக அருகில் உள்ள வீட்டில் சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று மாலை வழக்கம் போல் அண்டை வீட்டில் மும்முரமாக டிவி பார்த்து கொண்டிருந்தார் லட்சுமி.

வழக்கமாக பார்க்கும் சீரியலில் நேற்று முக்கிய காட்சிகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த மும்முரத்தில் இருந்ததால் வீட்டில் நடப்பதை அவர் அறிய மறந்துவிட்டார். இந்நிலையில் திடீரென அருகில் உள்ள மற்றொரு வீட்டை சேர்ந்தவர்கள் , வீட்டில் இருந்து புகை வருவதாக லட்சுமியிடம் கூறியுள்ளனர்.

உடனே வீட்டிற்குள் ஓடிய லட்சுமி, கதவை திறந்து உள்ளே சென்றதும் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, உடல் கருகிய நிலையில் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.சடலத்தைக் கைப்பற்றிய கீரைத்துறை போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருத்து வேறுபாட்டில் குடும்பத்தை பிரிந்து தனியார் வாழ்ந்து வந்த பெண், சீரியல் மோகத்தில் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்