2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி... குடும்பத்தகராறால் நிகழ்ந்த பெருந்துயரம்

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி... குடும்பத்தகராறால் நிகழ்ந்த பெருந்துயரம்

மாதிரி படம்

மதுரையில் குடும்பத்தகராறு காரணமாக, இரண்டு பிஞ்சுக்குழந்தைகளுக்கு தீ வைத்து கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வர்ஷா ஸ்ரீ மற்றும் வர்ணிகா ஸ்ரீ என்ற குழந்தைகள் இருந்தனர்.

  கணவன் - மனைவிக்குள் அவ்வப்போது குடும்பத்தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு, தமிழ்ச் செல்வி தனது இரண்டு குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

  ALSO READ |  ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு...வியந்து பார்த்துச் செல்லும் பொதுமக்கள் (புகைப்படங்கள்)

  இதில் இரண்டு குழந்தைகளும் நிகழ்விடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தன. உயிருக்கு போராடும் ஆபத்தான நிலையில் தமிழ்ச்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்தச் சம்பவம் குறித்து திடீர் நகர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கணவர் பாண்டி தலைமறைவாகியுள்ளார்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Sankaravadivoo G
  First published: