முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசுக்கு தவறாகப்பட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து செய்வோம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு!

அரசுக்கு தவறாகப்பட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து செய்வோம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு!

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

தடுப்பூசி  மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால்  அதிக பணியாளர்களை நியமித்து சமூக இடைவெளியை  ஏற்படுத்திக் கொடுத்து மக்களுக்கு தொற்று பரவாமல்  மாவட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

  • Last Updated :

மக்களின் கோரிக்கைகளை சுட்டிக்காட்டுவது தவறாக பட்டாலும், அந்த தவறை தொடர்ந்து செய்வோம் என திருமங்கலம் எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் 18 வயது முதல் 44 வது வயது வரை உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் மையத்தை திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மத்தியில் தடுப்பூசித் செலுத்திக் கொள்ள நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தற்பொழுது இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதற்கு போதுமான தடுப்பூசியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தடுப்பூசி  மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால்  அதிக பணியாளர்களை நியமித்து சமூக இடைவெளியை  ஏற்படுத்திக் கொடுத்து மக்களுக்கு தொற்று பரவாமல்  மாவட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மதுரை மாவட்டத்துக்குட்பட்ட 10 தொகுதிகளுக்கும் பேரிடர் மீட்பு பணிகாலங்களில்  நோய் தடுப்பு பணிகள், மருத்துவ கட்டமைப்பு வசதிகள் உருவாக்குவது போன்றவற்றில் ஆளும் கட்சி,  எதிர்க்கட்சி என பார்க்காமல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி செயலாற்றியதாக குறிப்பிட்ட ஆர்.பி. உதயகுமார்,  ”மக்கள் கோரிக்கைகளை  அரசின் கவனத்துக்குகொண்டு வருகிறோம். இதை  குறைகள் என்று பார்த்தால் நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது.

மேலும் படிக்க.. பாலியல் புகார்- ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..

மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல மக்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார்கள். ஆகவே மக்கள் கோரிக்கைகளை சுட்டிக் காட்டுவது தவறு என்று கூறினால் அந்த தவறை நாங்கள் தொடர்ந்து செய்வோம்” எனக் கூறினார்.

Must read.. அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்த கொரோனா நோயாளியின் சடலம்

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Madurai, RB Udayakumar