தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன், மதுரையில் இன்று தொடங்கினார். இதற்காக. மதுரை வந்த அவர், மாலை 4:30 மணிக்கு மேல மாசி வீதியில் தொண்டர்கள் மத்தியில் பிரசார பயணத்தை தொடர்ந்தார். திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தை ஆரம்பித்த போதும், அவர் பேசவில்லை. கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், தொண்டர்கள் மற்றும் ரசிகளை பார்த்து கையசைத்தவாறு வாகனத்தில் ஊர்வலமாக சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் உற்சாகமாக குரல் எழுப்பினர்.
முன்னதாக, பிரசாரம் மேற்கொள்ள மதுரை வந்த கமல்ஹாசனுக்கு, ஏராளமான தொண்டர்கள் கூடி, உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பேசிய அவர், எத்தனை தடைகள் வந்தாலும், சட்ட விதிமுறைகளை பின்பற்றி பிரசாரத்தை தொடருவோம் என கூறினார். மேலும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாவதற்கு சாத்தியம் இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேலும், காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்கத்தில், வியூகம் 2021 என்ற தலைப்பில், தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், மதுரையை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவோம் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Makkal Needhi Maiam