பட்டாசு ஆலையில் கோர விபத்து.. 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பட்டாசு ஆலையில் கோர விபத்து.. 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு
பட்டாசு ஆலையில் கோர விபத்து.. 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு..
  • Share this:
மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டி அருகே தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்தனர். மதுரை டிஐஜி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

மதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த போது, இன்று மதியம் 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம், விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் நிகழ்விடத்திலேயே லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள், வேல்தாய், காளீஸ்வரி உள்ளிட்ட 5 பெண்கள் உடல் கருகி உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Also read: ஆயுதபூஜைக்கான அழகு தோரணங்கள் விற்பனை தொடக்கம்; விலையேற்றத்தால் விற்பனை மந்தம்சம்பவ இடத்தில் மதுரை டிஐஜி ராஜேந்திரன், பேரையூர் டிஎஸ்பி மதியழகன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆலை உரிமையாளர் அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். இதனிடையே ஊரடங்கு விதிகளை மீறி 37 பேர் பணிபுரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், காலை 10.30 மணிக்கு மேல் மணி மருந்தை பயன்படுத்தக் கூடாது என்ற விதியும் மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading