ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உடலில் வாளால் வெட்டி நேர்த்திக்கடன்.. ரத்த பலி கொடுக்கும் விநோத பழக்கம்

உடலில் வாளால் வெட்டி நேர்த்திக்கடன்.. ரத்த பலி கொடுக்கும் விநோத பழக்கம்

ரத்த பலி கொடுக்கும் விநோதம்

ரத்த பலி கொடுக்கும் விநோதம்

உசிலம்பட்டி அருகே வாளால் உடம்பில் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மதுரை மாவட்டத்தில் உள்ள சௌண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமானோர்  தங்கள் உடலில் வாள் மூலம் வெட்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அருகேயுள்ள இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட  சமூகத்தினர் கொண்டாடும் ராமலிங்க சௌண்டம்மான் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

  இந்த ஆண்டும் வைகாசி திருவிழா நேற்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் திருவிழாவான இன்று உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலிலிருந்து சௌண்டம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.இந்த கரகத்தை பூசாரி ஊர்வலமாக தலையில் சுமந்து வரும் போது வழி நெடுகிலும் துர்தேவதைகள் தடுத்து நிறுத்த முயற்சி செய்யும் என அவர்கள் நம்புகின்றனர்.

   இதையும் படிங்க: ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் குமரன் சேதுபதி உயிரிழப்பு

  ரத்த பலி கொடுத்தால் துர்தேவதைகள் தடுத்து நிறுத்தாது என்பது ஐதீகம்.  துர்தேவதைகளுக்கு ரத்தபழி கொடுத்து கரகத்தை எடுத்து வருவதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள்; உடம்பில் வாளால் வெட்டிக் கொண்டு ரத்தபழி கொடுத்து கரகத்தை கோவிலுக்கு எடுத்துவந்தனர்.   வாளால் உடலை வெட்டிக் கொண்டு விநோத நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரகத்துடன் உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

  செய்தியாளர்: சிவக்குமார்- திருமங்கலம்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Madurai, Temple, Usilampatti