மு.க அழகிரியை வம்பிழுக்கும் வகையில் மதுரை முழுவதும் உதயநிதிக்கு போஸ்டர்!
கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க அழகிரி தற்போது மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

முக அழகிரி | உதயநிதி ஸ்டாலின்
- News18
- Last Updated: September 7, 2019, 11:21 AM IST
மு.க.அழகிரியை வம்பிழுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள், மதுரை முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை வடக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக ஆனையூர் பகுதி 48-வது வார்டு சின்ன புளியங்குளம் கம்மாய் தூர்வாரி கரை அகலப்படுத்தி நடைபாதை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடக்க உள்ளது.
திமுக இளைஞரணி சார்பில் இந்தப்பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.
இதனால், உதயநிதியை வரவேற்க மதுரை மாவட்டம் எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. மு.க அழகிரியை வம்பிழுக்கும் வகையில் ”உங்கள் பெரியப்பா மு.க அழகிரியின் கோட்டைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே வருக வருக” என பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க அழகிரி தற்போது மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
மதுரை வடக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக ஆனையூர் பகுதி 48-வது வார்டு சின்ன புளியங்குளம் கம்மாய் தூர்வாரி கரை அகலப்படுத்தி நடைபாதை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடக்க உள்ளது.
திமுக இளைஞரணி சார்பில் இந்தப்பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.

உதயநிதி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்

Loading...
Loading...