இட ஒதுக்கீடு போலவே பேரரிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையிலும் மகிழ்வான விசயம் நடக்கும் என்று அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கொரோனா நோயாளிகளுக்காக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 125 நாட்களாக நடைபெறும் அம்மா கிச்சனை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், ஆணையர் விசாகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் "மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு நிவாரணங்களை வழங்குகிறார் முதல்வர். அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் முதல்வர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இந்தியாவில் எந்தவொரு முதல்வருக்கும் உதிக்காத சிந்தனையை முதல்வர் நிறைவேற்றி உள்ளார். தமிழக அரசு சிறந்த நிர்வாகத்தை செய்தமைக்கு கஸ்தூரி ரங்கன் பாராட்டி உள்ளார்.
சென்னைக்கு அடுத்த நிலையில் மதுரை என்கிற இடத்தில் கொரோனா தொற்று இருந்தது. சிறந்த நடவடிக்கையால் மதுரையில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்குவதற்காக துவக்கப்பட்ட அம்மா கிச்சன் 125 நாட்களை எட்டியிள்ளது. அம்மா கிச்சனில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவால் 96 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
எழுவர் விடுதலை செய்யப்படுவர்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு போலவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்ய முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
Also read... Gold Rate | சற்றே உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மேலும், தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களை திமுக தலைவர் பார்க்க வேண்டும். வளர்ச்சி திட்டங்களில் குறை இருந்தால் திமுக தலைவர் சொல்லலாம். திமுக தலைவர் ஒரே நோக்கத்தில் மட்டுமே செயல்படுகிறார். திமுக தலைவர் தமிழகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக திமுக தலைவர் காணொளி காட்சி வழியே திருமணத்தை நடத்தி வைக்கிறார். முதல்வர் எதற்கும் அஞ்சாமல் மக்களை சந்தித்து வருகிறார். சத்தியம், உழைப்பு, யதார்த்தம், விசுவாசம் இதுவே முதல்வரின் அடையாளம். திமுக தலைவர் ஆயிரம் அறிக்கையை வெளியிட்டாலும் முதல்வரின் உழைப்பை மறைக்க முடியாது, தமிழக மக்களுக்கு நலன் சார்ந்தே முடிவுகளை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.