குப்பை கொட்டியதில் முன்விரோதம் - தந்தை கொலைக்கு 3 ஆண்டுகளுக்கு பின் பழித்தீர்த்த மகன்கள்

மதுரை அருகே குப்பை கொட்டியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் தந்தை கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளனர் மகன்கள்.

குப்பை கொட்டியதில் முன்விரோதம் - தந்தை கொலைக்கு 3 ஆண்டுகளுக்கு பின் பழித்தீர்த்த மகன்கள்
ஜெயசூரியா
  • News18
  • Last Updated: August 31, 2020, 11:15 AM IST
  • Share this:
மதுரை மாவட்டம் அய்யகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாரதி என்பவரின் மகன் 22 வயதான ஜெயசூர்யா . கடந்த 2017ம் ஆண்டு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் ஆண்டவர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஜெயசூர்யாவின் வீட்டுக் குப்பை கொட்ட பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஆண்டவர் குடும்பம் தட்டிக் கேட்டதால் இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெயசூர்யா தள்ளி விட கீழே விழுந்த ஆண்டவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாறியது. 19 வயதில் கொலை குற்றவாளியாக மாறிய ஜெயசூரியாவை ஒழித்துக்கட்ட சபதம் எடுத்தது ஆண்டவரின் குடும்பம். வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் அடுத்தடுத்து ஜெயசூர்யாவை ஆண்டவர் குடும்பத்தினர் குறிவைத்தது அப்பட்டமாக தெரிந்ததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அய்யகவுண்டன்பட்டியிலிருந்து, அலங்காநல்லூருக்கு குடிபெயர்ந்து ஜெயசூரியாவின் குடும்பம்.


Also read... தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் புதிய கட்டணம் - எவ்வளவு உயர்கிறது?

ஆனாலும் பகை துரத்திக் கொண்டே இருக்க, உறவினர்களை வைத்து கிராம பஞ்சாயத்து மூலம் பிரச்சனையை தீர்க்க முயன்றுள்ளனர். இந்த விவகாரத்தை இத்தோடு முடித்துக் கொள்ள குறிப்பிட்ட தொகையை ஆண்டவர் குடும்பத்திற்கு ஜெயசூரியா தரவேண்டும் என பேசி முடிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் ஆண்டவரின் மகன்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. சமரச பேச்சுவார்த்தைக்கு பின் கொரோனா ஊரடங்கு வந்ததால் குறிப்பிட்டபடி ஜெய் சூர்யாவால் பணத்தை வழங்க முடியவில்லை. இருந்தாலும் சமரசப் பேச்சு அமலிலேயே இருந்தது.இந்நிலையில் நேற்று சொந்த ஊரான அய்யகவுண்ட்பட்டியில் உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது சித்தப்பா பாலன் என்பவருடன், ஜெய் சூர்யா பைக்கில் சென்றுள்ளார்.  நிகழ்ச்சியை முடித்துவிட்டு அலங்காநல்லூர் திரும்பிக்கொண்டிருந்த ஜெயசூர்யாவை, பின்தொடர்ந்து வந்த ஆண்டவரின் மகன்களான 23 வயதான மஞ்ச மணி, 22 வயதான கார்த்திக் மற்றும் அவரது தாய்மாமனான 47 வயதான தங்கச்சாமி ஆகியோர்  சின்ன இலந்தை குளம் அருகே ஜெயசூர்யாவின் டூவீலரை இடித்து கீழே விழச் செய்தனர்ர்.

நிலை தடுமாறி கீழே விழுந்து ஜெயசூர்யாவை விரட்டி விரட்டி அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பினர். சித்தப்பா பாலன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் போலீசார், ரத்தவெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்த ஜெயசூரியாவை மீட்க ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அதில் விஜய் சூர்யாவை அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆபத்தான நிலையில் முதலுதவி செய்யப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் ஜெயசூர்யா, கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பாலன் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த ஆண்டவரின் மகன்கள் மற்றும் அவர்களது மாமனை அலங்காநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பை கொட்டிய விவகாரம் அடுத்தடுத்த இரு கொலையில் முடிந்திருக்கும் நிலையில் மேலும் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் வழக்கை தீவிரமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading