• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரை: தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கவேண்டும் - மு.க. ஸ்டாலின்

மதுரை: தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கவேண்டும் - மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

    அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். மேலும் 2 தீயணப்பு வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “மதுரை, ஜவுளிக்கடை தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்; அனுதாபங்கள்.

    வீரர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    இரு குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: