மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள மதுரை - கப்பலூர், விருதுநகர் - சாத்தூர், திருநெல்வேலி - கயத்தாறு, நாகர்கோவில் - நாங்குநேரி ஆகிய நான்கு சுங்க சாவடிகளில் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
கார், ஜீப், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 85 ரூபாயாக உள்ளது. இரண்டு அச்சு கனரக வாகனம் மற்றும் பேருந்திற்கு 270 ரூபாய் இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 290 ரூபாயாக உள்ளது.மூன்று அச்சு கனரக வாகனங்களுக்கு 295 ரூபாயாக இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 315 ரூபாயாக உள்ளது.மூன்று முதல் ஆறு அச்சு கொண்ட கனரக வானங்களுக்கு 425 ரூபாயாக இருந்த கட்டணம் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 450 ரூபாயாக உள்ளது. 7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு 520 ரூபாயாக இருந்த கட்டணம் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 550 ரூபாயாக உள்ளது.
கொரோனா கால பொருளாதார நெருக்கடியில் இருந்து சற்று மீண்டுள்ள நிலையில் இந்த கட்டணம் உயர்வு சுமையாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும், சுங்க சாவடிகளில் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளும் நடைபெறாமல் சுங்க கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.