ஏ.டி.எம் மிஷினை உடைக்க முடியாத ஆத்திரத்தில் பேட்டரியைத் திருடிச் சென்ற திருடன்

மதுரையில் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை திருட வந்த திருடன், அதற்கு வழியில்லாமல் போனதால் பேட்டரி, யூபிஎஸ் போன்றவற்றைத் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

மதுரையில் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை திருட வந்த திருடன், அதற்கு வழியில்லாமல் போனதால் பேட்டரி, யூபிஎஸ் போன்றவற்றைத் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

  • Share this:
மதுரையில் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை திருட வந்த திருடன், அதற்கு வழியில்லாமல் போனதால் பேட்டரி, யூபிஎஸ் போன்றவற்றைத் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

மதுரை ரயில்வே நிலைய பிரதான நுழைவு வாயில் முன்பு பிரபல வங்கி ஒன்றின் ஏ.டி.எம் மையம் உள்ளது. ஊரடங்கு காரணமாக ரயில் சேவை இல்லாத நிலையில் பயணிகள் இன்றி ரயில்வே நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாத ஏடிஎம் ஒன்றைக் குறிவைத்த திருடன் ஒருவன், ரயில்வே நிலைய நுழைவு வாயிலில் உள்ள அந்த ஏடிஎம் மையத்தைத் தனது திருட்டுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளான்.

திட்டமிட்டபடி உள்ளே நுழைந்த திருடன், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயற்சித்துள்ளான். ஆனால் அதற்கான அடிப்படை விவரங்கள் கூட தெரியாததால் மிஷினை உடைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தான். இருப்பினும் வந்ததற்கு ஏதாவது எடுத்துச் செல்லலாம் எனத் தீர்மானித்த அந்தத் திருடன், எளிதில் எடுத்துச் செல்லும்படி இருந்த யூபிஎஸ், பேட்டரி மற்றும் ஹார்டிஸ்க் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கிடைத்தவரை லாபம் என அங்கிருந்து புறப்பட்டுள்ளான். தகவல் அறிந்து அங்கு வந்த வங்கிக் கிளை மேலாளர் அனுஷா தேவி அளித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
Published by:Rizwan
First published: