தேவர் ஜெயந்தி: மதுரையிலுள்ள வங்கியிலிருந்து தங்க கவசத்தை பெற்றுக்கொண்டார் ஓ.பி.எஸ்

ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு அதிமுக சார்பில் ₹3.7 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட 13 கிலோ தங்க கவசம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு  வழங்கப்பட்டது.

தேவர் ஜெயந்தி: மதுரையிலுள்ள வங்கியிலிருந்து தங்க கவசத்தை பெற்றுக்கொண்டார் ஓ.பி.எஸ்
தேவர் ஜெயந்தி: மதுரையிலுள்ள வங்கியிலிருந்து தங்க கவசத்தை பெற்றுக்கொண்டார் ஓபிஎஸ்
  • Share this:
பசும்பொன்னில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்காக தங்க கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு அதிமுக சார்பில் ₹3.7 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட 13 கிலோ தங்க கவசம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு  வழங்கப்பட்டது. இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை பாதுகாப்புப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் விழா தொடங்குவதற்கு முன்பாக கட்சியின் பொருளாளர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் இணைந்து தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஜெயந்தி விழா வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா அக்டோபர் 28 தொடங்கி அக்டோபர் 30 வரை நடைபெற இருக்கிறது. தேவர் ஜெயந்தி விழா நிறைவு பெற்றவுடன், வருகிற 2ம் தேதி மீண்டும் தங்க கவசம் வங்கியில் ஒப்படைக்கப்படும்.


வங்கியிலிருந்து தங்க கவசத்தை பெற்றுக்கொண்டார் ஓபிஎஸ்


Also read: ஆண்டன் பாலசிங்கம் கொலைமுயற்சி.. தொழிலதிபர் மீதான வழக்கை ரத்துசெய்ய நீதிமன்றம் மறுப்பு..இன்று மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் இருந்து தேவரின் திருவுருவச்சிலைக்கான தங்கக் கவசத்தை வங்கி அதிகாரியிடமிருந்து முறைப்படி பெற்று தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் தமிழக துணை முதல்வரும் அதிமுக கட்சியின் பொருளாளரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார்.இதனைத் தொடர்ந்து தங்க கவசம் பெட்டகத்தில் வைத்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், நீதிபதி, சரவணன் பெரிய புல்லான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading