சிக்கன் விலை சரிவு: மதுரையில் நடந்த கொரோனா உணவுத் திருவிழா..!

சிக்கன் விலை சரிவு: மதுரையில் நடந்த கொரோனா உணவுத் திருவிழா..!
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
  • Share this:
மதுரையில் கொரோனா வைரஸை எதிர்த்து உணவு விடுதி ஒன்று இருநாட்கள் உணவுத் திருவிழா நடத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கொரோனா பீதி உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனாவை மையமாக வைத்து பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

அதன் தொடர்ச்சி தான் மதுரையில் உணவு விடுதி ஒன்று கொரோனா எதிர்ப்பு உணவுத் திருவிழாவை கடந்த இரண்டு நாட்களாக நடத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை எல்லீஸ் நகர் 70 அடி ரோட்டில் உள்ள தமிழா உணவகம்தான் கடந்த மார்ச் 15, 16 தேதிகளில் கொரோனா எதிர்ப்பு உணவுத்திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறது. அதென்ன கொரோனா எதிர்ப்பு என்று நீங்கள் புருவத்தை உயர்த்தலாம்.

தற்போது கொரோனா வதந்தியில் சிக்கி சின்னாபின்னமானது சிக்கன்தான். விலை வீழ்ச்சியை சந்தி்த்தும் சிக்கன் வாங்க மக்கள் தயங்குவதால் சிக்கன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்து ரூ.200-க்கு கொரோனா எதிர்ப்பு கிரில் சிக்கன், 20 ரூபாய்க்கு கொரோனா எதிர்ப்பு ஆம்லேட் என இரு டிஷ்களை அறிமுகம் செய்து அவற்றை வாங்குபவர்களுக்கு அதிரடி சலுகைகளையும் அறிவித்தனர்.

200 ரூபாய் கொரோனா கிரில் சிக்கன் வாங்கினால் 10 பரோட்டோ இலவசம், 500 ரூபாய் கொரோனா பக்கெட் பிரியாணி வாங்கினால் 10 முட்டை இலவசம் என அதிரடி ஆஃபரில் வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைத்தனர்.அது மட்டுமின்றி கடைக்கு வரும் அனைவருக்கும் இலவச கொரோனா சூப் இலவசமாக வழங்கினர். சரி அதென்ன, கொரோனா கிரில், கொரோனா ஆம்பலேட், கொரோனா பக்கெட் பிரியாணி, கொரோனா சூப்... என எல்லா உணவுகளுக்கு பின்னால் கொரோனா அடைமொழி. அங்கு தான் அவர்கள் டுவிஸ்ட் வைத்திருக்கிறார்கள்.

வழக்கமான கிரில் சிக்கனில் மசாலாக்கள் மற்றும் ஜாஸ் சேர்ப்பது வழக்கம். ஆனால் கொரோனா கிரில் சிக்கனில் இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகு ஆகியவற்றே தனித்தனியே இடித்து  அவற்றை மட்டுமே பூசிய சிக்கனில் கிரில் சிக்கன் தயாரித்து வழங்கியுள்ளனர்.

ஆம்லேட், பிரியாணி என அனைத்திலும் இதே முறை தான். இலவச கொரோனா சூப் தயாரிக்க கொல்லு, வல்லாரை, ஓமம், சீரகம், இஞ்சி, மிளகு பயன்படுத்தப்பட்டு அதை அனைவருக்கும் இலவசமாக வழங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக நடந்த இந்த கொரோனா எதிர்ப்பு உணவுத் திருவிழா,சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பை தந்துள்ளது. வழக்கமான விற்பனையை விட 5 மடங்கு விற்பனை அதிகரித்துள்ளது. இது விற்பனையின் ஒரு யுக்தி என்றாலும் இதுவும் ஒருவகை விழிப்புணர்வு என்கிறார் உணவக உரிமையாளர்.

Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading