Home /News /tamil-nadu /

மலையடிவாரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்: முதற்கட்ட விசாரணையில் தற்கொலை எனத் தகவல்..

மலையடிவாரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்: முதற்கட்ட விசாரணையில் தற்கொலை எனத் தகவல்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை சோழவந்தான் அருகே மலையடிவாரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் விக்கிரமங்கலம் ரோடு நாகமலை அடிவாரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக தென்கரை கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஜெயபிரகாஷ் காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தகவலறிந்த சோழவந்தான் இன்ஸ்பெக்டர் வசந்தி காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரி கண்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இறந்து கிடந்தவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர். வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து வந்து அதை கழற்றி வைத்துவிட்டு மதுவில் விஷம் அருந்தி குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் முதல் கட்டவிசாரணையில் தெரியவந்தது.



மேலும் படிக்க... மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து.. ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை...

அவர் வந்த சைக்கிள் அருகில் இருந்தது. இதுகுறித்து காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி சோழவந்தான் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

-----------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Vaijayanthi S
First published:

Tags: Dead body, Madurai, Suicide

அடுத்த செய்தி