94 ஆண்டு பழமையான அரசுப்பள்ளியை புதுமைப்படுத்திய ஆஸ்திரேலிய ரஜினி ரசிகர்கள்..

94 ஆண்டு பழமையான அரசு பள்ளி

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மதுரையின் கடைக்கோடியில் உள்ள பராமரிக்கப்படாத பள்ளிகளை புதுப்பிக்கவும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
94 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசுப்பள்ளி ஒன்றை 'ஸ்மார்ட் கிளாஸ்' முறையில் புதுமைப்படுத்தி அசத்தி இருக்கிறார்கள் ஆஸ்திரேலிய நாட்டின் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள்.

மதுரையைச் சேர்ந்த சாம்சன் ஜீவராஜ் என்பவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில், அங்கு ரஜினி மக்கள் மன்றம் மூலம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கு ஆஸ்திரேலியா ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக குரூப்பில் இருக்கும் சாம்சங் ஜீவராஜ், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வரவிருப்பதால் இந்த முறை அவரது அரசியல் பிரவேசம் நடைபெறும் என்கிற நம்பிக்கையில் அதற்கு வலுசேர்க்கும் விதமாக மதுரையின் கடைக்கோடி மாவட்டத்தில் கேட்பாரற்று கிடக்கும் அரசு பள்ளியை சீரமைக்க முடிவு செய்தார்.

அதன்படி மதுரை மாவட்டத்தின் கிழக்கு கடைக்கோடி பகுதியான வரிச்சூர் கிராமத்தில் 1926ஆம் ஆண்டு கட்டப்பட்ட அரசு பாடசாலை, தற்போது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என்ற பெயரில் இயங்கி வருகிறது. இருப்பினும் பழமை வாய்ந்த அதே கட்டடத்தில் தான் பள்ளி இயங்கி வருகிறது.

Also read... தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது? ராமதாஸ் கேள்வி.அந்தப்பள்ளியை புதுப்பிக்க முடிவு செய்த ஆஸ்திரேலிய ரஜினி மக்கள் மன்றத்தினர் மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அதற்கான பணியில் இறங்கினார். கட்டடத்தின் பழமை மாறாமல் அதை புதுப்பிக்கும் பணி ரூ.3 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்றது. அதேபோல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டு அப்பணிகள் நிறைவுபெற்று மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் மூலமாக இன்று பள்ளி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இப்பணியை தொடர்ந்து , டிவிக்கள், மற்றும் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட ஸ்மார்ட்போனை பற்றி தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி திறந்ததும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மதுரையின் கடைக்கோடியில் உள்ள பராமரிக்கப்படாத பள்ளிகளை புதுப்பிக்கவும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: