மதுரையில் கோவில் பூசாரி முத்துராஜா கொடூர கொலை

Youtube Video

மதுரை பாண்டி கோவில் பூசாரி அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

 • Share this:
  மதுரையில் மிகவும் பிரபலமான பாண்டி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் பூசாரியாக மதுரையை ஆண்ட வட்டாரத்தைச் சேர்ந்த முத்துராஜா என்பவர் இருந்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் கோவில் அருகே வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் காவல் துறை அதிகாரிகள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  கோவில் அருகே உள்ள கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் படிக்க...பெரம்பலூர் அருகே உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - ஒட்டியது யார்?

   

  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: