வெகுவாக குறைந்த பணப்புழக்கம் - மதுரையில் 50% வருவாய் இழப்பை சந்தித்த டாஸ்மாக் கடைகள்

கோப்புப்படம்

மதுரையில் பணப்புழக்கம் குறைவு காரணமாக டாஸ்மாக் கடைகளில் 50 சதவீத விற்பனை மட்டுமே நடைபெறுவதால் களைகட்டும் மதுரை மதுபானக்கடைகள் ஆளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

  • Share this:
தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையில் என்றுமே தனிக்கென தனி இடத்தை வைத்திருப்பது மதுரை மண்டலம். ஊரடங்கு காரணமாக சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் மதுபான விற்பனை நடைபெறாத நிலையிலும் ஒட்டுமொத்த மதுவிற்பனையில் தொடர்ந்து மதுரை மண்டலம் முதலிடத்தில் உள்ளது.

ஆனால், பிற தென் மாவட்டங்களை சேர்க்காமல் மதுரை மாவட்டத்தை மட்டும் தனியாக பார்த்தால் மதுரையின் மதுபான விற்பனை கடும் பாதிப்பை சந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு மாவட்டம் மற்றும் மதுரை தெற்கு மாவட்டம் என இரு பிரிவுகளாக மது விற்பனை நடைபெறுகிறது.

மதுரை வடக்கு பகுதியை பொறுத்தவரை ஒரு நாள் மது விற்பனை சராரசரியாக 1.60 கோடி ரூபாய். மதுரை தெற்கு பகுதியின் ஒரு நாள் சராசரி மது விற்பனை 1.50 கோடி ரூபாய். இவை தான் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை இருந்த தினசரி மதுபான விற்பனை. காலையில் கடை திறந்தததில் இருந்து கடை மூடும் வரை மதுரையில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதும்.

நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல், மாவட்டத்தில் வருவாய் தந்த பெரிய வர்த்தமாக மதுரையில் டாஸ்மாக் விளங்கியது. ஊரடங்கு, தீவிர ஊரடங்கு, பகுதிவாரியான ஊரடங்கு என பல்வேறு ஊரடங்குகளை சந்தித்த மதுரையில் தளர்வுகளுடன் கூடிய சாதாரண ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

ஜூலை 15-ம் தேதி முதல் தனது விற்பனையை துவக்கிய மதுரை டாஸ்மாக் கடைகளுக்கு பெரிய அளவில் விற்பனை நடைபெறவில்லை. காலை 10 மணிக்கு கடை திறந்தது முதல் மாலை 6 மணி வரை சொற்ப அளவிலேயே குடிமகன்கள் வருகை உள்ளது.

பெரிய அளவில் கூட்டம் வரும் என தடுப்புகள் எல்லாம் அமைத்து தடாலடி ஏற்பாடுகள் செய்திருந்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு பகுதிகளின் டாஸ்மாக் விற்பனை 50 சதவீதம் வீழ்ச்சியடைந்து 1 கோடியை 50 லட்சம் ரூபாய் வரை விற்பனை சரிவை சந்தித்து வருகின்றன.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கணிசமான விற்பனை நடைபெறுவதாகவும் மற்ற நேரத்தில் கடை வெறிச்சோடி இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தனது மனைவியின் நகையை கூட அடகு வைத்து குடித்துவிட்டதால் பணப்புழக்கம் இல்லாமல் மதுக்கடைக்கு வருவது குறைந்திருப்பதாக சில குடிமகன்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க...

மனைவியின் அக்கா உடன் கள்ளத்தொடர்பு - ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை

இது தொடர்பாக டாஸ்மாக் மேலாளர்களிடம் கேட்ட போது, ‘பணப்புழக்கம் இல்லாமல் போனது மதுபான விற்பனை பாதிப்பிற்கு முக்கிய காரணம் என்றும் கொரோனா தொற்று விழிப்புணர்வு மக்களிடத்தில் சென்றிருப்பதும் மற்றொரு காரணம்,’’ என்கின்றனர். அனைத்து தொழிலையும் ஆட்டிப்படைத்த கொரோனா ஊரடங்கு, டாஸ்மாக் விற்பனையையும் விட்டுவைக்க இல்லை.
Published by:Vaijayanthi S
First published: