நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்..

நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்..

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நீட் தேர்வு அச்சம் காரணமாக அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டு ஒரு வாரம்கூட நிறைவடையாத நிலையில், மதுரை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் , "மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா அவர்கள் இன்று காலை தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

  மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் கடிதம்


  Also read: செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் மரணம்: ஜவாஹிருல்லா இரங்கல்..  மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

  எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீதமுடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. மாணவச்செல்வங்கள் மனம்தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

  மதுரை பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் துர்கா நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மீண்டும் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்துவதற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்தார்.

  நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற அச்சத்தில் மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Rizwan
  First published: