நீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் உதவி ஆய்வாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை.. (வீடியோ)

Youtube Video

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  மதுரை பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் துர்கா நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மீண்டும் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்துவதற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்தார்.

  நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற அச்சத்தில் மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் படிக்க...மதுரை மாணவி உயிரிழப்பு: ”தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல” - மு.க.ஸ்டாலின்

  மேலும், மாணவியின் தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா கடிதம்


  இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  அதனைத் தொடர்ந்து ”தற்கொலை என்பது தீர்வல்ல, நீட் ஒரு தேர்வே அல்ல” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: